Visaranai Commission Sa.Kandhaswami Story
நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து விட்டேன் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் வாசிக்க நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசிக்க கூடிய புத்தகம்தான். ***வாழ்விலே மதிப்பு , மரியாதை எனபதை உணர்த்த நல்லது தீயது என்ற பாகுபாட்டில் எல்லாமே அடங்கி இருக்கிறது.*** முதலில் நான் எதிர்பார்த்த மாதிரி இது ஒரு கிரிமினல்நாவல் இல்லை.இது ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. தங்கராசு ஒரு பேருந்து நடத்துனர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவரின் மனைவி ருக்குமணி ஒரு ஆசிரியர். இவர்கள் இருவரின் நட்பு மிகவும் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்கராசு பத்தாம் வகுப்பில் தோற்றவன் ஆனால் ருக்குமணியோ படித்தவள். அந்த வித்தியாசம் அவர்களின் தினசரி வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. அவன் கோபப்படும்போது இவள் அமைதியாய் இருப்பதும் திரும்பி அவனே அவளிடம் பேசுவதும் வெகு இயற்கையாக நடக்கிறது. தொண்டை வலியால் பத்து நாட்களுக்கு மேலாக ருக்குமணி அவதிப்படுகிறாள்.
No comments yet