ஓர் இந்துத்துவருக்கான பதில்கள் - பகுதி இரண்டு: கிறிஸ்தவம், மத மாற்றம்., பெந்தகோஸ்தே வளர்ச்சி
இஸ்லாமியர் என்றால் பயங்கரவாதம் தொடர்பாக பேச அரம்பிப்பதைப் போல் கிறிஸ்தவர் என்றாலே மத மாற்றம் குறித்து ஆரம்பிப்பார்கள் இந்துத்துவர்கள். அதுவும் மென்மையாக ஆரம்பிப்பார்கள், “கல்விக்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பை மதிக்கிறேன்” என்று சொல்லி அப்புறம் ‘ஆனால்’ என்று இழுப்பார்கள். மத மாற்றத்தைக் கூட ஒப்புக் கொள்வார்கள், “அது தனி மனித தேடல் என்றால் ஓகே ஆனால் இந்த mass conversion இருக்கே அதை மட்டும்” என்று முகாரி ஆரம்பிக்கும்.
இந்தியா, குறிப்பாக தென்னிந்தியாவில், கிறிஸ்தவம் காலூன்றியதை காலம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட காலம். ஆனால் இணையத்தில் பேசும் பலருக்கும், சாமான்யர்கள் பலருக்கும் வரலாற்றோடு பரிச்சயம் இல்லை.
யதார்த்தம் வேறு என்கிறார் நண்பர் ஒருவர். பல ஊர்களில் இந்த பெந்தகோஸ்தே வகையறா பாதிரிமார்கள் தீடீர் சர்ச்சுகளை ஏற்படுத்தவும்