எத்தனை உயிர் இழப்புகளோ. இதுவாவது மருத்துவமனை என்ற ஒன்றின் அருகில் அவர்கள் வர ஆரம்பித்தப் பிறகு, அதற்கு முன்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் மகப்பேறு, வயோதிகம் மற்றும் குழந்தைப் பருவம் ஆகியவற்றில் எத்தனை மரணங்கள், எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை கோடிப் பேர்…கணக்கிட்டுவிட்டு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் மத மாற்றம் என்பது பற்றி வாயே திறக்கக் கூடாது.
இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவத்தில் திருச்சபையும் பாதிரியாரும் சபையோரின் வாழ்க்கையோடு பிணைந்தவை. அதனால் தான் தூத்துகுடியில் சபையோருக்கான வாழ்க்கை பிரச்சனையில் திருச்சபை முன் நின்றது. காலனி காலத்தில் நீதிமன்றங்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கென்றாலும் தலித்துகள் உள்ளே நுழைந்து வாதிட முடியாத போதெல்லாம் அவர்கள் மேல் கருணைக் கொண்டு மிஷனரிகள் வாதாடியதுண்டு. ஒரு சமூகத்தின் பெண்களை அரை நிர்வாணமாக்கி வர்ணாசிரமம் குதூகலித்தப்போது துணை நின்றது மிஷனரிகள் தானே?
இந்து சமஸ்தானம் என்று அறிவித்துக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் சகலருக்கும் கல்வி என்று அற்புதமாக