அரிசிக்கு மதம் மாறினார்கள் என்று நகைக்கும் அறிவிலிகளே அரிசிக்காக மதம் மாறியதற்கு யாரும் வெட்கப்படத் தேவையில்லை மாறாக ஒரு பெரும் சமூகத்தை, சக மனிதனை, அரிசி சாப்பிடக் கூடாதென்று வைத்திருந்த நீங்களே வெட்கப்பட வேண்டும். தங்கள் நாடுகளுக்கு அடிமை வேலைச் செய்வதற்கென்று இழுத்து வரப்பட்டவர்களைத் தான் மற்ற சமூகங்களில் அடிமைகளாக நடத்தினார்கள் ஆனால் இங்கோ உங்களோடவே பிறந்த மனிதனை மாட்டை விட கேவலமாக நடத்தியது நீங்களே.
மருத்துவமனைகளில் தலித்துகள் உள்ளே நுழைந்து மற்றவர்களைப் போல் சிகிச்சைப் பெற முடியாது மாறாக கட்டிடத்துக்கு வெளியே நின்று மற்ற எல்லோரையும் மருத்துவர் அனுப்பிய பின் வெளியிலிருந்த படி என்ன கஷ்டம் என்று கூவ வேண்டும் அதை வைத்து நோயை தீர்மானித்து மருத்துவர் ஏதேனும் மாத்திரையை வேறொரு கீழ் ஜாதிக்காரரைக் கொண்டு அனுப்புவார். எத்தனைப் பேருக்கு தவறாக வைத்தியம் பார்க்கப்பட்டதோ?
காலனி காலத்தில் நீதிமன்றங்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கென்றாலும் தலித்துகள்