ஆங்கிலத்திலும் பல நூல்களில் இருந்து தொகுத்து தான் பேச முடியும் அதுவும் அதிகப் பட்சம் 1960-கள் வரை. சமீபத்திய மாற்றங்கள் பற்றி நல்ல புத்தகஙள் இல்லை, கள ஆய்வுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வரலாறு நமக்கு ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. அதில் சில புள்ளிகளை மட்டும் இப்பதிவில் தொடுகிறேன்.
இந்து சமஸ்தானம் என்று அறிவித்துக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் சகலருக்கும் கல்வி என்று அற்புதமாக அறிவித்தது ஆனால் சாதி இந்துக்களுக்கு நடத்தப்படும் பள்ளிகளில் தலித்துகளைச் சேர்க்கவும் விரும்பவில்லை அவர்களுக்கான பள்ளிகளை தனியாகவேனும் தாங்களே நடத்தவும் விரும்பாமல் மிஷனரிகளை அழைத்து பணம் கொடுத்து அவர்கள் ஆச்சு நீங்கள் ஆச்சு என்று கை கழுவினார்கள்.
சிச்சீ என்ன இது மத மாற்றம்” என்பவர்கள் எல்லாம் மானுடத்தை வித்தியாசம் பார்க்காமல் அலைகடலென