ஓர் இந்துத்துவருக்கான பதில்கள் - பகுதி மூன்று: மத மாற்றத்தின் தேவைகளும், பலன்களும், அரசியலும்
மெக்காலேவினால் இந்தியாவில் கல்வி தழைத்தது. ஐடா ஸ்கட்டர் போன்றவர்களால் மருத்துவம் இந்தியாவில் கோடாக்கோடி உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. மிஷனரிகளால் கடைக் கோடி இந்தியனுக்கும் கல்விச் சென்றடைந்தது. இவற்றில் நூற்றில் ஒரு பங்கையாவது இந்து மதம் செய்திருந்தால் கிறிஸ்தவத்திற்கு இந்தியாவில் நுழைவாயில் அடைப்பட்டிருக்கும்.
அநேகரும் மத மாற்றத்தை கிறிஸ்தவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்க்கிறார்கள். காலனி ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியதால் மிக அற்புதமான ஆவண களஞ்சியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நானும் அந்த வரலாற்றையே பெருமளவு படித்ததால் கிறிஸ்தவ மத மாற்றம் குறித்தே எழுதுகிறேன். மத மாற்றம் என்ற தலைப்பில் தமிழில் சரியான நூல்கள் இல்லை,
சைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் விருந்துக்கு வந்தால் சைவமே பரிமாறியிருக்கிறோம்.