அந்நாவலின் முன்னுரையிலேயே எப்படி அந்தப் பாத்திரம் தன் பாட்டுக்கு பயணித்து ஒரு சோக முடிவில் தன்னைச் செலுத்திக் கொண்டது எனக் கூறி சரயு நதியில் ஜல சமாதியாகும் ராமனை ஒப்புமைக் கூறியிருப்பார். 'பாரீஸுக்கு போ' லட்சியவாதத்தை முன் வைத்தது என்றால் ‘கங்கை எங்கேப் போகிறாள்’ லட்சியமற்றப் பயணம் என்பது முன்னுரையிலேயே வாசகனுக்குத் தெளிவாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.
பிராமண கதாபாத்திரங்கள்
ஜெயகாந்தன் அதிகம் தன் கதைகளை பிராமணக் கதா பாத்திரங்களைக்கொண்டே அமைத்துக் கொண்டார். அதற்கு மிகப் பெரியக் காரணம் அந்த சமூகத்தின் முரன்பாடுகள். ஒரு புரம் சநாதன வைதீக பிற்போக்காளர்களும் மறுபுறம் சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டுமென்ற சீர்திருத்தவாதிகளும் தோன்றியது அந்த சமூகத்தில் தான். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பிராமணர்களே. இன்னொன்று, அந்த சமூகத்தின் சகிப்புதன்மை. ரிஷிமூலம் கதையை வேறெந்த சமூகத்தை வைத்து
காண்பிக்கிறார்.ரூமி மெதுவாக அவரின் பேரன்பில் இணைகிறார். அவர்களின் நட்பு தெய்வீகமானது