ஜெயகாந்தனின் முன்னுரைகள்
பெர்னார்ட் ஷாவின் முன்னுரைகளைப் போல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தியானவை. தன்னுடைய முன்னுரைகள் அதிகப் பிரசங்கித்தனங்கள் அல்ல, அவை வாசகனோடு உரையாடுவதற்கு தனக்கொரு வாய்ப்பு என்றொரு முன்னுரையில் கூறியிருப்பார். ஷாவின் முன்னுரைகள் எப்படி ஒரு பிரசார தொனியைக் கொடுத்து இலக்கியத் தன்மையை சிதைக்குமோ அப்படியே அது ஜெயகாந்தனின் முன்னுரைக்கும் பொருந்தும்.
நேரிடயான பாத்திரப் படைப்புகள் இருக்கும் கதைகளுக்கு முன்னுரை என்ற ஒன்றின் மூலம் தன் மனதில் எழுந்த எந்த தத்துவ முடிச்சு அந்தக் கதையை எழுதத் தூண்டியதென்பது முதல் தன் நிலைப்பாடு என்னவென்பதையும் சொல்லிவிட்டால் அப்புறம் வாசகன் தனக்குள்ளாக எதை, தன் வசிப்பனுபவம் மற்றும் வாழ்வியல் பின்புலம் கொண்டு, மீளுருவாக்கம் செய்ய தலைப்படுவான்?
பீம் சிங்கோடு அவர் உருவாக்கிய இரு திரைப்படங்களும், பின் அவரே இயக்கிய சினிமாவும், அவற்றின்