அந்தப் பாடல் பற்றி எழுதிய கனகலிங்கம் பாரதி ஜாதி வித்தியாசங்கள் தலைவிரித்தாடிய சிவன், விஷ்ணு, மற்ற தெய்வங்களின் கோயில்கள் பற்றிப் பாடல் எழுத்த மறுத்துத் தங்கள் அம்மனை பற்றிச் சிறப்பாகப் பாடினார் என்கிறார்.
பாரதியும் சமத்துவமும்
பாரதி தீவிர இந்து தான். “ஆரிய பூமி” என்றெல்லாம் பாட்டெழுதியவன் தான் ஆனால் அதுமட்டுமா பாரதி என்றால் இல்லவே இல்லை என்கிறார் கனகலிங்கம். புதுவை சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வான் பாரதி, இஸ்லாமியர் போல் உடையணிந்து சுற்றத்தாரை துணுக்குற வைப்பான், இஸ்லாமியர் நடத்திய டீக்கடையில் எல்லோரும் பார்க்க டீ பருகுவான், இஸ்லாமிய உனவகத்தில் பண்டம் வாங்கிச் சாப்பிடுவான்,
வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான்