உப்பளம் மாரியம்மனும் பாரதியும்
பாரதியின் “தேடி உனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” பாடலின் பூர்வீகம் சுவாரசியம். புதுவையில் உப்பளம் தேச முத்து மாரி அம்மன் கோயில் ஹரிஜனங்களுக்கான கோயில் அங்கிருந்த பூசாரி நாகலிங்கம் என்னும் வள்ளுவப் பண்டாரம். அவருக்கும் பாரதி பூணூல் அணிவித்தார், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. ஆரம்பக் காலத்தில் அப்பாடல் “உப்பளம் தேச முத்துமாரி” என்ற தலைப்பில் தான் வெளியானதென்றும் பிற்காலத்தில் ஏனோ வெறுமே ‘தேச முத்துமாரி’ என்றும் தலைப்பிடப்பட்டது என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் கனகலிங்கம். இது உண்மை. பாரதியின் கவிதைகளைக் கால வரிசைப்படுத்தி வெளியிட்ட சீனி.விஸ்வநாதனும் இத்தகவலை பதிவு செய்திருக்கிறார். பாரதியின் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட போது இது மாதிரி திருகு தாளங்கள் நடந்தன.
இன்று பலரும் மாறந்து விடுகிறார்கள். பாரதி சிறூ வயது முதலே பெருந்தன்மை மிக்கவன். அதனால் தான்