1
10
கனகலிங்கத்துக்குப் பூணூல்: இரு பார்வைகள்
கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய நிகழ்வை பூணூலை கழற்றினாலும் பிராமணராகவே இருந்து பதிவுச் செய்கிறார் வ.ரா. வ.ராவின் பார்வையில் அது ஒரு கேலிக்குரிய நிகழ்வு. “உன் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் பிராமணன் என்று சொல்” எனப் பாரதி முழங்கும் போது அந்த வைபவத்துக்காகப் பாறதி அழைத்திருந்த பிராமண நண்பர்கள் யாரேனும் நகைக்கிறார்களா என்று நோட்டம் விட்டதாக வ.ரா எழுதுகிறார். கனகலிங்கத்தைக் குறிக்கும் போது ‘அவன்’, ‘பையன்’ (கனகலிங்கம் 22 வயது ஆண். வ.ராவை விட ஒரு வயது இளையவராக இருந்திருப்பார்) என்று தான் வ.ரா குறிக்கிறார். மேலும் தன் பூணூலை கழற்றிவிட்ட பாரதி ஏன் பூணூல் அணிந்து இன்னொருவருக்குப் பூணூல் அணிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்
புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்