1
23
ஏம்லே சத்தமே கேக்கல்ல?” என்றான் ஜான்சன்
“ஆமா, சத்தமே கேக்கல்ல” என்று லாசர் சொன்னான்.
ஜான்சன் “செத்துப்போச்சுலே” என்றான் ஜான்சன்.
“செத்துப்போச்சா?” என்று லாசர் கேட்டான்.
“பாருலே, அதுக்க கொடுக்கு செத்திருக்கு”
லாசர் கூர்ந்து பார்த்தான். மெய்யாகவே அது செத்துவிட்டிருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது.
ஜான்சன் சட்டியிலே எடுத்திருக்கப்பிடாதுலே” என்றான்.
“சட்டியிலே எடுத்தோம்ல, அதனாலேதான் செத்துப்போச்சு”.என்றான் லாசர்.
ஜான்சன் “நான் எடுக்கல்லே” என்று ஜான்சன் சொன்னான். லாசரை நோக்க்கி கைசுட்டி “’நீதான் எடுத்தே” என்றன்.
லாசர் ‘ஆமா, நாந்தான் எடுத்தேன்” என்றான்.
“நான் வேண்டாம்னாக்கும் சொன்னேன்” என்றான் ஜான்சன்.
சூசன்னா சொன்னாள். அப்படிச் சொல்லும்போது வலுவான ஒரு மறுப்பை எதிர்பார்ப்பது மனித வழக்கம்