எலியட் கிப்சோகே ஒரு தேர்ந்த வாசகர்.அவர் பேசும்போது பல குறிப்போடு பேசுபவர்.தனது ஒவ்வொரு நாள் பயிற்சியையும் எழுதிவைத்துக் கொள்பவர்.தற்போது அவரிடம் பதினைந்து பயிற்சி ஏடுகள் உள்ளன. வருடத்திற்கு ஒன்று . ஆம் அவர் பயிற்சி ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றன. அவருடைய ஒரு பதிவு "Motivation + Discipline = Consistency".
இதுவரை கிப்சோகே எந்த ஒரு ஊக்கமருந்து விசயங்களில் சிக்கதாவர். அவ்வாறே வருங்காலத்திலும் இருப்பார் என்று நம்பூவோம்.
பெர்லின் மரத்தான் முடிந்த பிறகு கிப்சோகே கொடுத்த பேட்டியில் வளரும் மரத்தான் வீரர்களுக்கு அவர் கூறிய அறிவுரை "Of course, training is important. But more important is the passion you put in it. You have to strongly believe that you are able to make it and be able to run this distance. That’s the magic of a marathon." ஆம் மரத்தான் என்பது ஒரு மேஜிக் தான்.
இந்த சாதனை கொண்டாட பட வேண்டியது. கொண்டாடுவோம் .
0
14