1
15
இந்த பெர்லின் மரத்தானைப் பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால் கிப்சோகே எந்த திட்டமுமின்றி ஓடியதுதான். எனக்கு அப்படிதான் படுகிறது. ஏனென்றால் தொடக்கமுதல் இறுதிவரை அவரின் வேகம் குறையவே இல்லை. ஒரு இடத்தில் கிப்சோகேவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை மற்றும் படிப்படியாக pacemakers-சும் ஒருவர்பின் ஒருவராக நின்றுவிட்டனர்.இருந்தும் கிப்சோகே எந்த சலனமும் அடையாமல் ஓடினார் அவரது ஒரே எதிரி நேரம்தான். அவர் சோர்வடைந்ததற்கான எந்த அறிகுறியும்(தோல்பட்டை சுருங்குவது, கால்கள் தடம் மாறுவது ) இல்லாமல் இறுதிக் கோட்டைக் கடந்தார் . கடந்த பிறகும் நிற்காமல் ஓடி தனது பயிற்சியாளரை கட்டித் தழுவினார். அந்த புகைப்படம் ஒரு ஆவணம் .இனி வரும் வீரர்களுக்கு அது ஊக்கத்தைக் கொடுக்கும்.
ஓரு இலக்கியவாதியை சிங்கமென்றும் ஆளுமையென்றும் விளிப்பது அரிது மட்டுமல்ல ஒரு வகையில்