Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil Part 2

1 11
Avatar for KingTamil
4 years ago

எதிர்பார்த்தது போல எலியட் கிப்சோகே உலக சாதனை புரிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அவர் எடுத்துக்கொண்ட நேரம்  - 2:01:39 (மனுசன் மெஷின் மாதிரி ஓடிருக்காப்ல ). இதில் மேலும் ஆச்சிரியமென்றால் இறுதி 17 கிலோமீட்டர் அவர் ஒருவரே தனியாக ஓடியதுதான். அவரோடு எந்த
pacemaker-ம் ஓடவில்லை.  Pacemakers என்பவர்கள் முன்னிலையில் இருக்கும் வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அவர்களுடைய வேகத்திலேயே சில கிலோமீட்டர்கள் ஓடுபவர்கள். வெவ்வேறு வேகத்திற்கு வெவ்வேறு pacemakers உண்டு. கீழே எலியட் கிப்சோகேவின் பெர்லின் மரத்தான் ஐந்து கிலோமீட்டர்

அதாவது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டரைக் கடப்பதற்கு கிப்சோகே எடுத்துக்கொண்டது சராசரியாக 14:24:90 நிமிடங்கள்(!). மேலேயுள்ள புள்ளிவிவரத்தில் மற்றொன்று முக்கியமானது அவர் இரண்டாது பாதியை முதல் பாதியைவிட விரைவாக கடந்தது. இதற்கு முந்திய உலக சாதனை நேரம் 2:02:57 . டெனிஸ் கிமெட்டோ என்பவரால் 2014 பெர்லின் மரத்தானில் நிகழ்த்தப்பட்டது.இப்போது அதை கிப்சோகே 2:01:39-ஆக குறைத்துள்ளார். அதாவது முந்தையதை விட 78 வினாடிகள் குறைவு. இந்த மாதிரி உலக சாதனைகளுக்கிடையே  பெரிய வித்யாசம் வருவது 1967-ற்கு பிறகு இப்போதுதான்.

2
$ 0.00
Avatar for KingTamil
4 years ago

Comments

இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும்

$ 0.00
4 years ago