0
7
நேற்றே இன்று கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். ஓட தொடங்கியபோது "முத்து மணி மாலை" ஆரம்பித்தது. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அப்படியே "சின்ன கவுண்டர்" படம் மனதில் தோன்றியது. நான் எப்போது அந்த படம் முதலில் பார்த்தேன் என்று ஞாபகமில்லை. இப்போது இந்த படம் மனதில் வரக் காரணம் ஏதோ ஒரு சேனலில் "சின்ன கவுண்டர்" ,"தேவர் மகன் " போன்ற படங்களுக்கு பெரிதாக ஏதும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் "அசுரன்" பரியேறும் பெருமாள்" போன்ற படங்களுக்கு ஏன் பெரிய எதிர்ப்பு வருகிறது என்று ஒருவர் கேட்டார். உண்மைதானே! அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மனதில் ஓடியது. என்ன ஒரு வெறித்தனம். அந்த மனிதனின் வாழ்நாள் கோபம்.தனுஷ் ஒரு மகா நடிகன்.