0
18
அவன் அந்த வழியாகச் சென்றான்… அவன் இங்கே எங்கோ அருகில் இருப்பவன்” அப்போதுதான் அவள் அவனுடைய தோற்றத்தை நினைவுகூர்ந்தாள். “அவன் முறையான குளிராடைகள் கூட அணிந்திருக்கவில்லை.”
பெட்ரூஸ் அவளை கூர்ந்து நோக்கி “சொல், அவன் எப்படி இருந்தான்?” என்றார்.
“அவன் வெள்ளையன்… “ என்ற சூசன்னா “அவன் எனக்கு அறிமுகமான முகம் கொண்டிருந்தான்” என்றாள்.
பெட்ரூஸ் புன்னகைத்து “சரி… நாம் கிளம்புவோம். நீ பிராந்தியை குடி… இந்த ஒரு மிடறு மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது” என்றார்.
அவள் அந்த பிராந்தியை வாயில் நெடுநேரம் வைத்திருந்து மெல்ல மெல்ல உள்ளே இறக்கியபின் கையூன்றி எழுந்துகொண்டாள். “பேட், எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது… அதுதான் வழி. அந்த இளைஞன் வழிகாட்டியிருக்கிறான்… செல்வோம்.”