எல்லா முரகாமியின் நாவலிலுள்ளது போல இதிலும் இசை முக்கிய கதாப்பாத்திரம்.இந்த நாவலில் பிரான்ஸ் லிஸ்ஸ்ட்டின் (Franz Liszt ) Le mal du pays என்ற இசைக்கோவை வந்து கொண்டே இருக்கிறது. இந்த இசைக்கோவை "Years of Pilgrimage" என்ற தொகுப்பில் உள்ளது. அற்புதமான பியானோ இசை இந்த நாவலை வாசிக்கும்போது பெரும்பாலும் நான் இந்த இசையைக் கேட்டேன் . நாவலில் இரண்டு விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . முதலாவது சுக்குருவின் வேலை - இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும் நாகனோவிற்கு செல்லும் வழியிலுள்ள நிலையங்கள் மேலும் அழகு.சுக்குரு தன் வேலையை விரும்பி செய்கிறான். இரண்டாவது அவன் வார இறுதியில் தவறாமல் செய்யும் நீச்சல். நீச்சல் அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டுகிறது. நீச்சலைப் பற்றி முரகாமி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.
நாவலில் சில இடங்களில் தட்டையான எழுத்துநடை இருந்தாலும் பல இடங்களில் கவித்துவமான எழுத்துநடை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
1
15
மரத்தான் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே உலக சாதனைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின அது மேலு