காதலியின் உந்துதலால் பதினாறு வருடங்களுக்கு பிறகு தனது பால்ய நண்பர்களை ஒவ்வொருவராக சென்று பார்க்கிறான்.ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்தவற்றை விளக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் ஒற்றுமைக்காக அவன் பலிகடாக்கப்படுகிறான்.ஒன்றன்பின் ஒன்றாக தனது ஆழ்மனதில் இருந்த ரகசியங்களும் அவனுக்கு வெளிப்படுகிறது. தான் யார்? தனது கடந்த காலம் எத்தகையது ? என பல கேள்விகள் அவனுள் எழுகிறது.அவன் தன்னைப்பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்துகொள்கிறான்.
மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் ஹைடா. நீச்சல் குளத்தில் சந்தித்து நண்பனானவன். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். ஹைடவும் திடீரென அவனை விட்டுச் செல்கிறான். அவன் ஏன் அப்படி செய்தான்? அவனுக்கு இவன்மேல் காதலா? அல்லது சுக்குருவின் கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோது ஏன் இந்த ஹைடா கதாப்பாத்திரம் இடையில் வருகிறது?
பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராவின் தலைமையிலான திராவிடர் கழகமும் அதன் பின் அதிலிருந்து பிரிந்து