Ulagalavil Corona vin thandavam

0 13
Avatar for G4ceTech
3 years ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.84 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,84,258 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 22,302,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,043,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 6,474,511 பேர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 62,035 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766,626 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53,014 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2,036,703 பேர் குணமடைந்தனர்.

1
$ 0.00
Avatar for G4ceTech
3 years ago

Comments