0
22
இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. பொதுவாக குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல.
அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்