இதைக் கேட்ட) வரக்கா, "(நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவி டம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார்'' என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, "(மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திட காத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!'' என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?'' என்று கேட்க, வரக்கா, "ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன்'' என்று சொன் னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (3)