பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தை யின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
"வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவி யவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழி யில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல் லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(ருந்து அரபு மொழியி)ல் எழுது வார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், "என் தந்தையின் சகோதரர் புதல் வரே! உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், "என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள்.