2
17
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே
பொருள்:
வண்டு பட = வண்டுகள் வந்து தேன் உண்ண
ததைந்த = அடர்ந்த
கொடி இணர் = நீண்ட கொடிகள்
இடை இடுபு = இடையில் இட்டு ஓர் இடை இடையே இட்டு
பொன் செய் = பொன்னால் செய்யப்பட்ட
புனை இழை = புனையக் கூடிய ஆபரணங்களை
கட்டிய மகளிர் = அணிந்த பெண்கள்
கதுப்பிற் = கூந்தலில்
தோன்றும் = தோன்றக்கூடிய
புதுப் பூங் கொன்றை = புதிய கொன்றை மலர்கள்
கானம் = கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து
இருப்பது மாதிரி, கானகம் கொன்றை மலர்கள் பூத்து அழகாக
விளங்குகிறது
கார் = கார் காலம்
எனக் கூறினும் = என்று கூறினாலும்
யானோ தேறேன் = நான் நம்ப மாட்டேன்
நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன்