பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன்
கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக்
கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா மாபாரதமென்றான்
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்:
பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று
அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம்
மாபாரதம் என்றான்
பொருள்:
பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு
சுழி "ன்" போட்டால் கர்ணன்)
இகல் பார்த்தனை = பகைமை கொண்ட அர்ஜுனனை
முன் கொன்று = அதற்க்கு முன்னால் கொன்று
அணங்கின் = பாஞ்சாலியின்
காரார் குழல் களைந்து = கருமையான முடியை களைந்து
மொட்டை அடித்து
காலில் தளை பூட்டி = காலில் விலங்கு பூட்டி
நேராகக் கைப் பிடித்து = உன் கைகளையும் பிடித்து
நின்னையும் யான் கட்டுவனேல் = உன்னையும் நான்
கட்டினால்
வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் = இந்த மா
பாரதப் போர் வராமல் காக்கலாம் என்றான்
பேரென் என்று பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது