2
16
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
பதம் பிரித்து பொருள் பார்க்கலாம்:
தந்த பசிதனை அறிந்து = குழந்தையின் பசியினை அறிந்து
முலை அமுது தந்து = மார்போடு அணைத்து அதன் பசி போக்கி
முதுகு தடவிய தாயார் = ஏப்பம் வர வேண்டி அதன் முதுகை தடவித்தரும் தாயார்
தம்பி = உடன் பிறந்த தம்பி
பணிவிடைசெய் தொண்டர் = பணிவிடை செய்யும் வேலை ஆட்கள்
பிரியமு தங்கை = அன்பான தங்கை
மருக (ர்) = மருமகன் மற்றும் மருமகள்
உகந்த மனிதன் வேண்டிய மனிதன் (நம்ம ஆளு) நமது அன்பன் என்னுடைய (முருகனின்) அன்பன்