Nalayira thivya pirabantham odi pogalama 10

2 22
Avatar for ChemRaj
3 years ago

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்

பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

தீயாடு வாய்இதனைச் செப்பு

சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா ? சுடு காட்டில் பேய்களோடு இணைந்து ஆடுபவனே, நீயே சொல்.

அழலாட = தீ ஆட

அங்கை சிவந்ததோ = அந்த கை சிவந்ததா?

அங்கை அழகால் = அந்த கையின் அழகால்

அழல்சிவந்த வாறோ = நெருப்பு சிவந்ததா?

கழலாடப் = காலில் அணிந்த கழல் ஆட

பேயோடு = பேய்களோடு

கானிற் = சுடுகாட்டில்

பிறங்க = பிறழ்ந்து, இணைந்து

அனலேந்தித் தீயாடு வாய் = அனல் ஏந்தி ஆடுவாய்

இதனைச் செப்பு = நீயே சொல்லு

0
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

இல்லையேல் வெறும் எறும்புத்திரளென அவர்கள் ஆகிவிடுவார்கள்” என்று சுருதன் கூறினார்

$ 0.00
3 years ago

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின்

$ 0.00
3 years ago