0
20
பல பூசனைகளுக்கும் சடங்குகளுக்கும் பின் வேறு நிமித்திகர்களிடம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிமித்திகர் எழுவர் அவை கூடி, களம் வரைந்து, கல் பரப்பி, தெய்வங்களிடம் உசாவி ஒரு மறுமொழி உரைத்தனர்.
அதன்படி ஒரு பிழைநிகர் செய்யப்பட்டது” என்றார் சாத்யகி. நான் “அவர்கள் துவாரகையின் நிமித்திகர்கள் அல்ல. துவாரகையின் நிமித்திகர்கள் முனிவரின் தீச்சொல்லுக்கு மாற்றே இல்லை என்றே கூறினர். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது என்றே அறிவுறுத்தினர். மூத்தவர் சுருதன் சினந்து அவர்களை அறைந்தார். சாம்பன் அவர்களை அரியணையில் இருந்து எழுந்து வந்து ஓங்கி உதைத்து வீழ்த்தினார்” என்றேன். “அதன் பிறகு அசுர குலத்தைச் சேர்ந்த நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். அவர்களே இந்தப் பிழைநிகர்ச் செயலை கூறினர்.”