0
29
அத்தனை பேர் உள்ளத்திலும் திரண்டெழுந்து அப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது? இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது? இது எங்கிருந்து கிளம்பி வந்தது?” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்? எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன?” என்று திரும்பி கேட்டார்.
“அந்தகரே, இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்பது இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தீய நிகழ்வின் முதிர்வுப்புள்ளி” என்றார் சாத்யகி.