Puliketh Travel Novel

2 9
Avatar for rmktamilsoft
4 years ago

நாள் 1:

நாங்கள் தாய்லாந்து செல்வது இது மூன்றாவது முறை. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து எவ்வளவு தாய்லாந்து பணம் கொண்டுவந்துள்ளோம் என்பதை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். நாங்கள் படிவத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை சிங்கப்பூரிலேயே பூர்த்தி செய்து எடுத்துச் சென்றோம் ஏனென்றால் கடந்தமுறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படிவத்தை பூர்த்தி செய்ய செலவானது. அதிகாரி ப்ரிண்ட் அவுட்டை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டு "very good" என்றார். அடுத்த பத்து நிமிடத்தில் நாங்கள் ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்துவிட்டோம்.

ஒரு ஜப்பானிய தொலைகாட்சி தொடரில் ஒருவர் கூறுவார் "ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அதன் உணவு பட்டியலில்(மெனு கார்டு) இருந்து தெரிந்து கொள்ளலாம் " என்று . எனக்கு அது பொருந்தும்.நான் எங்கு சென்றாலும் அங்குள்ள உணவின் சுவையை அறிவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பேன். உணவின் மூலமே அந்த நாட்டைப் பற்றி அறிய முற்படுவேன்.இந்தமுறையும் அதே நோக்கம்தான். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தவுடன் அருகில் இருந்த 7eleven-ல் "oishi chicken sandwich" வாங்கினேன். மகள் சாக்லேட் பிஸ்கட் வாங்கினாள். "oishi chicken sandwich" மிகவும் சுவையாக இருந்தது. இது தாய்லாந்து உணவு கிடையாது.இது ஜப்பானிய முறையில் செய்தது. நான் இந்த sandwich-ஐ பலமுறை உண்டிருக்கிறேன். ஆரம்பமே சுவையாக ஆரம்பித்ததில் பெரும் மகிழ்ச்சி.

ஹோட்டலில் இருந்து எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேன் வந்தவுடன் அதில் ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் புக்கேத்தின் தெற்கு எல்லையில் இருக்கும் ரவாய் கடற்கரை அருகில் இருக்கிறது. ஹோட்டலின் பெயர் "#roost glamping". அறை காலியாக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது என்று சொன்னவுடன் வரவேற்பு அறையிலேயே இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ஒரு அழகான குன்றிமேல் இருந்துது. அறை ரெடியாவதற்குள் சாப்பிடலாம் என்று எண்ணி மெனு கார்டை பார்த்தல் ஒரு சில தாய்லாந்து உணவுகளைத் தவிர அனைத்தும் மேற்கத்திய உணவு வகைகள். சிறு ஏமாற்றம் இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி சில உணவு வகைகளை ஆர்டர் செய்தோம். சாப்பிட்டதில் மிகவும் பிடித்தது "பாட் தாய் (pad thai)" தான்.

3
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

சூப்பர் நாவல் நண்பா.. உங்கள் அனுபவத்தை மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்

$ 0.00
4 years ago

சில இடங்களில் தேவையில்லாத தலபுராணங்கள் வருகின்றன.

$ 0.00
4 years ago