மீனவர்கள் துன்பம் கண்ணதாசன் பாடல்

1 121
Avatar for rmktamilsoft
4 years ago

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்..

3
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

கண்ணதாசன் பாடல்கள் மறக்க முடியுமா..என்றும் நினைவில் இருந்து நிங்கதவை

$ 0.00
4 years ago