1
8
சினிமா கவர்ச்சியைக்கொண்டே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரை மையமாக வைத்து ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ எழுதினார். அதை அன்று எழுதி வெளியிடுவதற்கு அவருக்கே தைரியமிருந்தது. இன்றும் சினிமா மோகத்தில் தன் ஆன்மாவைத் தொலைத்துவிட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அந்தக் கதை. மிகை நடிப்புக்குப் பெயர்போன மற்றொரு நடிகரை அவரை மேடையில் வைத்துக் கொண்டே சாடினார் ஜெயகாந்தன். அந்நடிகரின் ‘பிள்ளைகள்’ போன்ற ரசிகர்கள் முஷ்டியையுயர்த்த அவர் பதிலுக்கு ‘வாங்கடா’ என்றாராம்.
இதுபோன்ற கதைகள் பல இப்போது வலம் வந்து கொண்டிருகின்றன. அவற்றுள் பல apocryphal என்று சொல்லத்தக்கவை. ஆனால் அவற்றை அவர் செய்திருப்பார் என்று நம்பும்படியான வாழ்க்கையை அவர் வாழ்ந்ததாலேயே அந்தக் கதைகளுக்கு ‘aprocryphal’ என்று சொல்லத்தக்க நம்பகத்தன்மை இருந்தது.
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள்