தமிழ் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் தன் ஏற்புரையில், "நான் தமிழில் எழுதியதால் என்னை நான்கு கோடிப் பேருக்கு தான் தெரியும், இதையே ஹிந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும், ஆகவே தமிழர்களே ஹிந்திப் படியுங்கள்" என்றார். அவர் அப்படிப் பேசும் போது மேடையில் பல்கலைக் கழக துணை வேந்தரும் அன்றைய ஆட்சியில் இரண்டாமவராக இருந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் அமர்ந்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவன் நான்.
அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்று மார்ட்டின் லூதர் கிங்கின் ஒரு சொற்றொடர் ஒன்றுண்டு (‘speaking truth to power’). உண்மயைப் பேசுவதென்பதே அருகிவிட்ட ஒரு சமூகத்தில் அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்பது கான்பதற்கரிய காட்சியாகிவிட்டதையே ஜெயகாந்தனுக்குக் கிடைத்த ‘சிங்கம்’ எனும் பாராட்டுரை சொல்லுகிறது.
நான் தமிழில் எழுதியதால் என்னை நான்கு கோடிப் பேருக்கு தான் தெரியும், இதையே ஹிந்தியில் எழுதியிருந்தால்