அந்த இரங்கல் உரையும் ஜெயகாந்தனின் அரசியலும்
நானறிந்த எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு திறமை ஜெயகாந்தனுக்குண்டு. அவர் சிறந்த பேச்சாளர். ‘கேட்பினும் கேளாத் தகையவே வேட்ப மொழிவதாம் சொல்’ எனும் குறளுக்கு ஜெயகாந்தனைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அனல் கக்கும் அவரின் பேச்சுகள் வெறும் உணர்வெழுச்சிகளல்ல. மிக மிகக் கோர்வையாக மையக் கருத்தை நிருவி, அதற்கு தர்க்க ரீதியாக வலு சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு மேடைப் பேச்சிற்கான அனைத்து உயரிய பன்புகளையும் தன்னகத்தே கொண்டவையே ஜெயகாந்தனின் பேச்சுகள்.
ஜெயகாந்தன் பேசியதிலும் எழுதியதிலும் மிக அதிகமாக சர்ச்சைக்குட்பட்டது அவர் கண்ணதாசன் அழைப்பின் பேரில் அண்ணாத்துரைக்கான இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரை தான். ‘அவரை அறிஞர் என்று மூடர்களேக் கூறுவர். பேரறிஞர் என்று பெருமூடர்களேக் கூறுவர்’ என்று இரங்கல் கூட்டத்தில் இடி முழக்கம் செய்தார் ஜெயகாந்தன். அப்படி அவர் பேசி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்குப்பின் இப்போதும் இணையத்தில் அதிகம் படிக்கப்படும் ஒரு பேருரை என்றால் அதுவாகத்தான் இருக்கும். அண்ணாத்துரையை பேரறிஞர் என்று நினக்காதப் பலரும் கூட அந்தப் பேருரைக் கேட்டு முகம் சுளித்தார்கள் அல்லது ‘அப்படிப் பேசி இருக்க வேண்டாம். அதுவும் இறந்து விட்ட ஒருவரைப் பற்றி’ என்று நினைத்தார்கள். இன்றும்.
கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு