அந்த உரையை சாடுபவர்களும் சரி அதைக் கொண்டாடுபவர்களும் சரி அதிலுள்ள சில வரிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகின்றனர். முதற்கண் ஒன்றை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். இரங்கல் கூட்டத்தில் பேசுவதற்காக கண்ணாதாசன் அழைத்த போது தன்னால் கடுமையான விமர்சனத்தையேக் கூற முடியுமென்று தெளிவாகக் கூறிவிடுகிறார் ஜெயகாந்தன். கண்ணதாசன் ஒப்புக் கொண்டதன் பேரிலேயே தான் பேசச் சென்றதாகப் பின்னர் எழுதினார் ஜெயகாந்தன்.
ஒரு சங்கடமான உண்மையை ஒரு ஜனத் திரளுக்கு சொல்லுவது எப்படி என்பதற்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு அவ்வுரை ஒரு சீரிய எடுத்துக்காட்டு. ‘Mob’ என்பதற்கும் ‘gathering’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி எப்படி இறந்து போனவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதரென்றும் அப்படிப் பட்டவர்கள் சராசரியான ‘இறந்தவரைப் பற்றிக் குறைச் சொல்லலாகாது’ என்ற பன்பாட்டு முறைக்கு விதி விலக்கானவர்கள் என்று விளக்கிய பின் தான் தன் விமர்சணங்களை அடுக்குகிறார்.