0
7
ஒருநாள் காலை பத்திரிக்கையில் கண்ட ஒரு பத்து வயதுப் பயனின் சந்நியாசக் கோலம் நமது ஹிந்து சமயவாதிகளின் ஹிருதயமற்ற, உணர்ச்சியற்ற, ஆண்மையற்ற, குறூரச் செயலின் கொடுமை பொறுக்காது என்னை உள்ளூரக் குமுறி அழ வைத்தது. அதன் விளைவு ‘கழுத்தில் விழுந்த மாலை’". இந்த முன்னுரைக்குப் பிறகு வாசகன் எதற்கு அந்தக் கதையைப் படிக்க வேண்டும்? வேடிக்கையென்னவெனில் இந்தக் கதைக்காக அவரை தூஷித்தவர்களும் கொண்டாடியர்வகளும் அவர் ‘ஜய ஜய சங்கர’ எழுதிய போது அப்படியே இடம் மாறினார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் லட்சுமியின் நடிப்பினால் உந்தப் பட்டு ‘கங்கை எங்கே போகிறாள்’ என்றார் ஜெயகாந்தன். நாவலுக்குள் நுழையும் முன்பே வாசகனுக்கு கங்காவின் கதி என்னாகும் என்பது தெளிவாகிவிடும். அந்நாவலின் முன்