ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்றவுடன் இணையம் மற்றும் ஊடகங்களில் குறிப்புகள் குவிய தொடங்கிய போது இரண்டு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன, அவை ‘சிங்கம்’, ‘ஆளுமை’. ஓரு இலக்கியவாதியை சிங்கமென்றும் ஆளுமையென்றும் விளிப்பது அரிது மட்டுமல்ல ஒரு வகையில் அச்சொற்கள் அவரின் இலக்கிய தரத்தை குறைத்து மதிப்பிடுபவர்களின் வாய்க்கு அவலானது. வயிற்றெரிச்சலில் ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருந்தது பிம்பம் என்றும் அது ஊடகங்கள் கட்டமைத்தது என்றும் சொன்னார். ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது ஊடகம் என்று இன்று நாம் விளிக்கும் எதுவும் கிடையாது. வெகு ஜனப் பத்திரிக்கைகள் தவிர அன்று இருந்தது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கிய ஒரு திராபைத் தொலைக் காட்சி தான். அப்புறம் எப்படி இந்த ‘சிங்கம்’, ‘ஆளுமை’ என்பதெல்லாம், குறிப்பாக, ஏன் அந்த பிம்பம் உருவானது?
2
12
என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது