0
10
எழுதியிருந்தாலும் ஜெயகாந்தனின் உயிருக்கு உத்தரவாதமிருந்திருக்காது. ஆனால் அதற்காக தேவையேயில்லாத இடங்களிலும் கூட அவர் தன்னிச்சையாக பிராமண வீடுகளையே கதையின் பின்னனியாக வைத்ததும் நடந்தது.
சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்
சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள், கலை என்பது என்ன, சினிமாவின் வர்த்தக சமரசங்கள் பற்றியெல்லாம் தெளிவான அபிப்பிராயங்கள் கொண்டவர் ஜெயகாந்தன். சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்கள் உற்ற நண்பர்களாக இருந்த போதிலும் அவர்களின் உயரிய பண்புகளும் கீழ்மைகளையும் அவர் நன்கே அறிந்திருந்தார்.