இன்று நான் நீங்கள் உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய காப்புறுதி பற்றிய சொல்லபோகிறேன். இன்று வாழ்க்கை காப்புறுதி மிகவும் முக்கியம் என்பதால் நாம் அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
எனவே ‘இன்சூரன்ஸ் என்றால் என்ன அது எவ்வாறு வேலை செய்கிறது என்று பாப்போம்?
ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளுக்கெதிரான பாதுகாப்பு ஆகும்.
நடைமுறைக்கு ஏற்ப சொல்வதென்றால், ஆயுள் காப்பீடு ஆனது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, எதிர்பாராத ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்களினால் ஏற்படும் பாதக விளைவுகளை எதிர்கொள்ள உதவுகிறது.
ஏன் ஆயுள் காப்பீடு பெறவேண்டும்? | Explanation of life insurance in tamil
ஆயுள் காப்பீடு நம்மை அனைத்து அபாயங்களிலிருந்து, நமக்கும் நம் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, நம் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது.
இது, ஓய்வுகாலத்துக்குப் பின்னர், நம் குழந்தையின் எதிர்கால செலவினங்கள் அல்லது நம் செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாகப் ஏற்கப்படும்.
ஏன் ஆயுள் காப்பீடு தேவை? | Why Life Insurance is Important
பின்வரும் தேவைகளுக்காக நமக்கு காப்பீடு தேவை நிதித் தேவைகளுக்கு நம்மைச் சார்ந்துள்ள குடும்பத்திற்காக நாம் காப்பீடு செய்வது அவசியம்.
நம் குடும்பம், நிதித் தேவைகளுக்கு நம்மைச் சார்ந்திருந்தால், நிச்சயமாக நம்மை நாம் காப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்கு மிகப் பொதுவான காரணம் என்னவெனில், ஒருவேளை நம் குடும்பத்தில் எதிர்பாரத இழப்பு ஏற்படின், அதற்குரிய பாதுகாப்பை ஆயுள் காப்பீடு வழங்கும்.
ஆயுள் காப்பீட்டு இலாபங்களை, நம் குடும்ப உறுப்பினர்களின் செலவினங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.
கடன் அல்லது பொறுப்புகள்:
எடுத்துக்காட்டாக: நாம் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது நம் சொத்துக்களை அடமானம் வைத்திருந்தாலோ, நாம் காப்பீடு செய்துகொள்வது மிக முக்கியம்.
இதன்மூலம் மன அமைதி மட்டுமின்றி, குடும்பத்துக்கு நிலையான வருமானமும் கிடைக்கிறது.
கட்டாய சேமிப்பு மற்றும் முதலீடு எவை?
ஆயுள் காப்பீட்டினை, கட்டாய சேமிப்பாகவும் முதலீட்டுக்கான வழியாகவும் பயன்படுத்தலாம்.
ஆயுள் காப்பீட்டிலிருந்து பெறும் இலாபமானது, குழந்தைகளின் உயர் கல்வி அல்லது ஓய்வுகால நிதி அல்லது விடுமுறையைக் கழித்தல் போன்ற எதிர்கால செலவினங்களுக்குப் காப்பீடு மிகவும் அவசியமாக பயன்படுத்தலாம்.
ஒரு நிறுவனத்தின் கூட்டாளர் அல்லது சொந்தமாக தொழில் புரிபவர் காப்பீடு எடுப்பது அவசியம்.
ஒரு நிறுவனத்தின் கூட்டாளராக உள்ளவர்கள் அல்லது சுய தொழில் புரியும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு மிக அவசியமானது.
ஏனெனில், ஆயுள் காப்பீடானது, வாங்கி விற்கும் ஒப்பந்தத்தில் முதலீடு செய்வது போன்ற சில சிறப்பு வணிகப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம்.
வணிக உரிமையாளர் இறந்துபோனால், அவருடைய வட்டிப் பணத்தினை வழங்க அல்லது வணிகப் பொறுப்புகளைக் கொடுத்துத் தீர்க்க, ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்தப்படும்.