Backlinks in tamil : நாம் ஒரு புதிய ப்ளாக் தொடங்கி விட்டோம் என்றால் அதில் பலவிதமான டிப்ஸ் மற்றும் நுணுக்கங்கள் நம் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நம்முடைய புதிய பிளாக் கூகுள் சர்ச் இஞ்சினில் முதன்மையாக வருவதற்கு நாம் பலவிதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய பிளாக் தரம் (Rank) உயரும்.
இன்று நாம் மிகவும் பயனுள்ள டாபிக் பற்றி பார்க்கப்போகின்றோம், உலகத்தில் உள்ள பல பிளாக்கர்கள் இந்த backlinks உருவாக்குவதில் மெனக்கெடுவார்கள். ஏனென்றால், இது உங்கள் ப்ளாக் சர்ச் இன்ஜினில் வருவதற்கு உதவிகரமாக இருக்கும்.
சரி நேரத்தை வீணடிக்காமல் backlinks என்றால் என்ன அதைப் பற்றி பார்ப்போம்.
Backlinks என்றால் என்ன? – Backlinks in tamil:
நான் மேலே கூறியது போல உலகத்தில் உள்ள பல பிளாக்கர்கள் இந்த Backlinks பயன்படுத்துவார்கள். பொதுவாக நீங்கள் நிறைய பிளாக்கிற்கு சென்று பார்த்திருப்பீர்கள் அதில் வேறு பிளாக் அல்லது வெப்சைட் உடைய links கொடுத்திருப்பார்கள், இதைத்தான் backlinks என்று கூறுகிறோம்.
நம்முடைய பிளாக் போஸ்டில் அடுத்தவருடைய பிளாக் லிங்கை ஹைப்பர் லிங்க் செய்வதும் ஒருவகையான Backlinks தான். இதற்கு Outbound links என்ற இன்னொரு பெயரும் உண்டு