0
15
இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன்.
அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”