0
14
வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம்