அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.