இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்? இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை
0
9