பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார். இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது.
0
7