சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு.
15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு.
16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016).
17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016).
மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது: “இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்”