தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
17 வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்
1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.
2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது
மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது இருவர் கைது