திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது).
4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது).
5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது.
6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது.
7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012)
8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014).
9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014).
பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.