Madi Thottam First Lesson

0 11
Avatar for Mani
Written by
4 years ago

2014-ல் சில புதிய முயற்சிகளை திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக, மாடி தோட்டம். போன வருடம் மாடியில் கொடி வகைகள் வளர்ப்பதர்க்கு ஒரு பந்தல் அமைத்து செய்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. தொட்டியில் நடும் போது பாகல், புடலை எல்லாம் முளைத்து நன்றாக தான் வந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் செடி சோர்வாக, வளர்ச்சி குன்றி, ஒரு கட்டத்தில் காய்ப்பதற்கு முன்னமே முற்றிய செடி போல் ஆகி காய்ந்து விட்டது. அதே நேரத்தில் கீழே வெறும் தரையில் வைத்த செடி எந்த கவனிப்பும் இல்லாமல் செழிப்பாக வந்தது.

மாடி தோட்டத்தில் முக்கிய பிரச்சினை, மண் இறுகி போவது. நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு எல்லாம் போட்டு கலந்து எடுத்தாலும், நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகிறது. ரோஸ் மாதிரி செடிகள் தாக்கு பிடித்து விடுகின்றன. ஆனால் கீரை, காய்கறி செடிகள் திணற ஆரம்பிக்கிறது. மேலும், காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாய் வறட்சி ஆகி வளர்ச்சி சரியாய் இருப்பதில்லை.

முன்பு கலந்து கொண்ட ‘மாடி தோட்டம்’ ஒரு நாள் பயிற்சியில் இருந்து சில விவரங்களை சேகரித்து சின்னதாய் ஒரு மாடி தோட்டம் அமைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டுவிட்டு தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கே பொள்ளாச்சி பக்கத்தில் நிறைய தொழில்சாலைகள் இருக்கின்றன. இந்த பவுடரை Compress செய்து ஒரு கிலோ, ஐந்து கிலோ கேக் வடிவில் கிடைக்கிறது.

Coir Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’ ‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும்.

1
$ 0.00
Avatar for Mani
Written by
4 years ago

Comments