சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது.
0
14